ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப்பின் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமார், ரச்சித மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
==================