ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள படம் போகுமிடம் வெகுதூரமில்லை. விமல், மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசியதாவது: இந்தக் கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கதையைக் கேட்டதும், செய்யலாம் என்றார். ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. பிறகு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் எண்ணம் இல்லை, ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார்.படப்பிடிப்புக்கு ஏழு மணிக்கே மேக்கப்போடு வந்து நிற்பார் விமல். இதில் வசனம் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும். அசத்தியிருக்கிறார். இந்தக் கதைக்களம் புதிது. ஆனால் இதை நம்பி தயாரித்தது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு பேசினார்.
விழாவில் கருணாஸ் பேசியதாவது: இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் கா ரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பா கப் படம் எடுத்துள்ளா ர். தயா ரிப்பா ளர் சிவா மிக நல்ல மனம் கொ ண்டவர். நியூசிலா ந்து போ ய் சா தித்துக் கா ட்டிய இந்தியன். 24 ஆண்டுகளா க நடித்துக் கொ ண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை . சினிமா உலகம் யா ரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வே ண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தா ன் வரவே ண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் கா ட்டியுள்ளா ர்.
என்னையும் விமலை யும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இதுதான் முதல் படம். நான் ஹீரோவுடன் நடித்த எல்ல ப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக்கே ட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி. என்றார்.