ரோபோ சங்கரின் ஆண் திமிர்: தொகுப்பாளினியின் நிறம் குறித்து விமர்சனம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறவர் ரோபோ சங்கர். ஒரு காலத்தில் கோவில் திருவிழாக்களில் உடல் முழுவதும் வெள்ளை பெயிண்ட் பூசிக் கொண்டு ரோபோ வேடம் போட்டு ஆடியதால் ரோபோ சங்கர் என்று பெயர் பெற்றார். சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர்.

ஆனால் தான் வந்த பாதையை மறந்து விட்டு பொதுமேடைகளில் இவர் பெண்கள் பற்றி பேசுவதும், வழிவதும் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகாவை மேடையில் வைத்துக் கொண்டே அவரது காலை தொட்டு பார்க்க ஆசை, கட்டிப்பிடிக்க ஆசை என்றெல்லாம் பேசி தனது அற்பத்தனமாக அரிப்பை வெளிப்படுத்தினார். இதுபோன்று பல மேடைகளில் அவர் பேசி அதற்கான எதிர்ப்பை சந்தித்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற படத்தின் விழாவில் அவர் தொகுப்பாளினி கவிதாவின் நிறம் குறித்து கிண்டல் செய்திருக்கிறார். கவிதா என்பவர் திரைப்பட பத்திரிகையாளராக இருந்தாலும் சிறு பட்ஜெட் படங்களுக்கு சின்னதாக ஒரு மதிப்பூதியம் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினிகளுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுக்க முடியாதவர்களின் ஆஸ்தான தொகுப்பாளினியாக கவிதா செயல்பட்டு வருகிறார். அவரின் கவித்துவமான தூய தமிழ் உச்சரிப்பை அனைவரும் ரசிப்பார்கள்.

அந்த கவிதாவின் நிறம் குறித்துதான் பொதுமேடையில் விமர்சித்திருக்கிறார் ரோபோ சங்கர். அவர் அந்த நிகழ்வில் பேசும்போது கவிதா வாங்கும் மதிப்பூதியம் குறித்து தரக்குறைவாக பேசிவிட்டு “அவர் விரைவில் நன்றாக மேக்அப் போட்டு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். நான்தான் ஹீரோ, பி.எல்.தேனப்பன் வில்லன், இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கூட கிடைத்து விடுவார் யார் பார்ப்பார்கள் என்றுதான் தெரியவில்லை”. என்றார்.

இதற்கிடையில பார்வையாளர்கள் படத்தின் தலைப்பு பற்றி கேட்க ரோபா சங்கார் “கவி…தா” என டபுள் மீனிங்கில் பதில் சொன்னார். மேடையின் பக்கவாட்டில் இருந்த ஒரு மடச் சாம்பிராணி ‘கரு கரு கருப்பாயி’ என்று சொல்ல ரோபோ சங்கரும் அதுவும் நன்றாகத்தான் இருக்கு அந்த தலைப்பை திரும்ப திரும்ப சொன்னார். அதாவது கவிதா கருப்பாக இருப்பதைத்தான் இந்த இரு மடச் சாம்பிராணிகளும் கூறியிருக்கிறார்கள்.

ரோபோ சங்கரின் வீட்டில் உள்ள அனைவரும் கருப்பு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் என்பதை ரோபோ சங்கர் சங்கர் வசதியாக மறந்திருக்கிறார். ஸ்பான்சர் பிடித்து மகள் திருமணத்தை நடத்தியவருக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது.

Leave A Reply

Your email address will not be published.