அண்ணா சாலையின் புதிய அடையாளம்: ‘கீதம் வெஜ்’ 11வது கிளை திறப்பு

சென்னையில் புகழ்பெற்ற ஓட்டல் குழுமம் ‘கீதம் வெஜ்’. தற்போது சென்னை அண்ணா சாலையில் தனது 11வது கிளையை திறந்துள்ளது. அண்ணா சாலையில் பெரிய அளவிலான பார்க்கிங் வசதியுடன் இந்த ஓட்டல் அமைந்திருப்பது இதன் சிறப்பு அம்சம். எல்.ஐ.சி அலுவலகத்தின் அருகில் இது அமைந்துள்ளது.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாக இய’குனர் முரளி கூறியதாவது: இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், ‘கீதம் வெஜ்’ சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வருகிறோம்.

‘கீதம் வெஜ்’ அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும் துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத் தவிர, ‘கீதம் வெஜ்’ஜின் சுவையூட்டும் இனிப்புகளுக்கென தனி ஸ்டாலும் உள்ளது.

‘கீதம் வெஜ்’ஜின் இனிப்புகள் மற்றும் பிரத்தியேகமாக விற்கப்படும் உயர்தர பிற பொருட்கள் எல்லாம் எங்கள் ஒவ்வொரு உணவகத்தின் ஸ்டால்களிலும் உண்டு. இவை தவிர ஹோம் டெலிவரி, வெளிப்புற கேட்டரிங் சேவைகள், வெட்டிங் கேட்டரிங் ஆர்டர்கள் மற்றும் பஃபே நிகழ்வுகளையும் திருப்திகரமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தோடு நடத்தி தருவோம்.

கூடுதலாக, எங்கள் திறமையான கால் சென்டர் குழு சரியான நேரத்தில் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், குறைகள் இருந்தால் அவற்றை விசாரித்து உடனே நிவர்த்தி செய்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொரு முறையும் சுவையான உணவு வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது ‘கீதம் வெஜ்’. என்றார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.