கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில், அவரது உதவியாளர்கள் சூர்ய கதிர், கார்த்திகேயன் இயக்கும் படம் ஹிட் லிஸ்ட். இதில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம்,மித்ரன் ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ், ‘சிறுத்தை’சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி.உதயகுமார், றி.வாசு, இயக்குனர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி, ஆர்.பார்த்திபன், கே.பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும்,தயாரிப்பாளர்கள் கலைப்புலி.தாணு, சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: இந்த திரைப்படம் உருவாவதற்கு காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு
நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன். எதார்த்தமாக வீட்டில் பேசும்போது விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார், நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள் என்று விக்ரமன் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.
முதலாவதாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் அவர்களுக்கு,என் மீதும் இயக்குனர் விக்ரமன் சார் மீதும் அன்பு பாராட்டி, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்காகவும் கதாபாத்திரத்துகாகவும் ஒத்துக் கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி.துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
என்னதான் என்னுடைய உதவி இயக்குனர்களையே இந்த திரைப்படத்தின் இயக்குனர்களாக பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கினார்கள். அதேபோல் அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன். இங்கு வந்து வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
இயக்குனர் விக்ரமன் பேசியதாவது: இந்த திரைப்படத்தை தயாரித்ததற்கு கே.எஸ்.ரவிகுமாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அப்பாவாக அல்லாமல், ஒரு இயக்குனராக சொல்கிறேன்… விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். அவர் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். என்றார்.