கமர்ஷியல் சினிமாவாக தயாராகி உள்ளது ‘ரசவாதி: இயக்குனர் சாந்தகுமார்

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது தயாரித்து இயக்கி உள்ள படம் ‘ரசவாதி’. இதில் அர்ஜூன்தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சரவணன், சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர், எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.

படம் பற்றி சாந்தகுமார் கூறியதாவது: என்னுடைய படங்களில் அப்நார்மல் ஹியூமன் கேரக்டர்கள் இடம் பெறுவதற்கு நான்தான் காரணம். நான் அப்படி என் படங்களும் அப்படி. இந்த படம் எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எல்லா அம்சங்களும் நிறைந்த பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

கொடைக்கானில் அமைதியான வாழ்க்கை வாழும் சித்த வைத்தியரான அர்ஜூன் வாழ்க்கையை சுற்றிய படம். கொடைக்கானலுக்கு வரும் ஐடி ஊழியர் தன்யா ரவிச்சந்திரன் அர்ஜூன் தாசை சந்திக்கிறார். அதன்பிறகு வரும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும். இது சயின்ஸ் பிக்சன் படமும் அல்ல, ஆன்மா, ஆவி சம்பந்தப்பட்டதும் அல்ல. எல்லாம் கலந்த படம்.

நான் கதை எழுதிவிட்டு அதற்கேற்ப நாயகர்களை தேடுகிறேன். கதை எழுதுவதற்கும், அதற்கேற்ற நடிகர்களை தேடுவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். இதனால் தயாரிப்பாளர்கள் காத்திருக்க மாட்டார்கள் என்பதால் நானே தயரிக்கிறேன். தயாரிப்பு புதிய அனுபவமாகவும், கடினமாகவும் இருக்கிறது. என்கிறார் சாந்தகுமார்.

Leave A Reply

Your email address will not be published.