‘அப்பா’ படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள்: சமுத்திரகனி வேதனை

சமுத்திரக்கனி, ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ராமம் ராகவம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்கியுள்ளார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் சார்பில் பிருத்தவி போலவரபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குநர்கள் பாலா, பாண்டிராஜ், நடிகர்கள் தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சமுத்திரகனி பேசியதாவது: அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. படத்தின் இயக்குநர் என்ன எடுக்கப்போகிறார் என்பது எனக்குத் தெரியாது.

ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை. தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும் அப்பா கதை என்றாலே வாங்க கேட்ப்போம் பண்ணுவோம. என்று சொல்லி விடுவேன்.

பொதுவாக அப்பாவியாக எதுவும் தெரியாது என சொல்பவர்கள் படத்தை எடுத்துவிடுவார்கள். நீச்சல் தெரியாதவனை தண்ணீரில் தூக்கிப்போட்டால் நீச்சல் கற்றுக்கொண்டு மீண்டு வந்துவிடுவான். ஆனால், அதிகமாக பேசி ஆராய்ச்சி செய்பவர்கள் அவனும் மூழ்கி நம்மையும் மூழ்கடித்து விடுவான். நம்பிக்கையை மட்டும் சுமந்து வருபவர்களின் பின்னணியில் சென்றுவிடுவேன். படம் சிறப்பாக வந்துள்ளது.

ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியுள்ளது. ‘அப்பா’ என ஒரு படம் எடுத்தேன். இன்றுவரை அது என்ன ஆனது என்பது குறித்த கணக்கே எனக்கு வரவில்லை. இப்படித்தான் இன்றைய சூழல் உள்ளது. அதன்பிறகு எனக்கு படம் எடுக்கவே தோணவில்லை. பேரன்புடன் படத்தை எடுத்துவிடுகிறோம். அதை கொண்டு போய் சேர்க்கும்போது மகிழ்ச்சியே இருபதில்லை. அதற்கான வழியும் தெரியவில்லை.  இவ்வாறு சமுத்திரகனி பேசினார்.

இயக்குனர் பாலா பேசும்போது, “சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர்.  மற்றவர்களுக்குஉதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கு.  உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்”  என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.