அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா படம், `நாகபந்தம்’. ‘டெவில்’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்தப் படத்தை இயக்குகிறார். ஆன்மீக மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
கேஜிஎஃப் புகழ் அவினாஷ் கதை நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவாளராகவும் அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
நாகபந்தம் பான் இந்தியா படமாக தயாராகிறது. இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.