டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்ட பரம் இயக்குகிறார்.
இந்தப் படம் ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்காக பாடுபடும் மாமனிதனின் கதையாக உருவககிறது. ஒரு வருட இடைவெளிக்குப்பின் தனஞ்செயா கன்னட திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். அவரது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் என்று தெரிகிறது.
படம் பற்றி இயக்குனர் பரம் கூறும் போது ” கடந்த ஆண்டு தொலைக்காட்சி சேனலில் இருந்து வெளியே வந்தவுடன் பெரிய திரையில் கதைகளை உயிர்ப்பிப்பதே என் இலட்சியமாக இருந்தது ” என்றார்.
பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே இந்த படத்தை தற்போது கன்னடத்திலும் தயாரிக்கிறார். அருண் பிரம்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வாசுகி வைபவ்- நோபின் பால் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.