இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படமாக உருவாகியிருந்த ஹாட் ஸ்பாட். மார்ச் 29ம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெற்றிவிழா, நடைபெற்றது.
இவ்விழாவினில் எடிட்டர் முத்தையா, இசையமைப்பாளர் வான், நடிகர்கள் சுபாஷ், திண்டுக்கல் சரவணன், அமர், கேஜேபி டாக்கீஸ் பாலமணி மார்பண் பேசியதாவது..சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் தினேஷ் கண்ணன், செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார் நடிகை சோபியா, ஜனனி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது: திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டெஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார். மார்ச் 29ம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் இப்போது வரைக்கும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பணமாக தயாரிப்பாளர் இயக்குனருகு 10 லட்சம் ரூபாய் மேடையிலேயே முன்பணமாக கொடுத்தார்.