புதியவர்களெல்லாம் சேர்ந்து உருவாக்கின படம் இது. அறிமுக இயக்குனர் வினோத்ராஜ்ங்றவரு இயக்கி இருந்தாரு. கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடிச்சிட்டு அதை ரிலீஸ் பண்ண முடியாம தவிச்சிட்டிருந்தப்போ படத்தை பார்த்த விக்னேஷ் சிவனும், நயன்தா£ரவும் படம் இண்டர் நேஷனல் ரேன்ஞ்சுக்கு இருக்குதேன்னு கணிச்சு படத்தை முழுசா வாங்கிட்டாங்க. அப்பால அவுங்களளோட படம் மாதிரி காட்டிக்கிட்டு உலக திரைப்பட விழாவுக்கெல்லாம் அனுப்பிச்சாங்க. பல இடங்கள்ல விருதும் வாங்கிச்சி, அப்புறம் இருக்கிற செல்வாக்கை பயன்படுத்தி இரண்டு வருடத்துக்கு முன்பு ஆஸ்கர் விருது விருதுககும் அனுப்பினாங்க. அங்க கண்டுக்கவே இல்ல… நிஜமாவே படத்தை தயாரிச்சவங்க பணம் கிடைச்சா போதும்னு ஒதுங்கிட்டாங்க. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் படத்துக்கு முழு உரிமை கொண்டாடியது படத்தை இயக்கனவரும் எங்க«ன்று தேடுற அளவிற்கு காணாமல் போயிட்டாரு. இப்போ படம் தயாராகி இரண்டு மூணு வருஷத்துக்கு பிறகு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணினா பைசா தேறாதுன்னு கணிச்சு ஓடிடி தளத்துல ரிலீஸ் பண்ணியிருக்காரு விக்னேஷ் சிவன்.
இது இந்த படத்துக்கு பின்னால இருந்த வியாபார அரசியல்… சரி இப்போ படம் என்ன ஆரசியல் பேசுதுன்னு பார்க்கலாம்…
எது எப்படி இருந்தாலும் இது ஈரானிய படங்கள் போன்று கொரியன் படங்கள் போன்று உலகத்தரமான படம்தான் அதுல எந்த சந்தேகமும் இல்லை. அதன் பலனை, புகழை உரிய படைப்பாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு போய் சேராமல் பணம் கொடுத்த ஒரே காரணத்துக்காக ஒரு அறிவு சுரண்டலை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் செய்திருக்கிறார்கள்.
சரி படத்துல என்ன கதைன்னு பார்க்கலாம். கதைன்னு ஒன்னு இல்லைங்றதுதான் இந்த படத்தோட கதை. சரி இருந்தாலும் சொல்றதுக்கு ஏதாவது வேணும்ல அதுக்காக இப்படிச் சொல்லிக்கலாம்-. படத்தோட நாயகன் ஒரு பெரும் குடிகாரன். தன்னிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்ட மனைவியை என்னோட வாழ வர்றியா இல்ல நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவா என்று கேட்டுவரச் செல்கிறான். தன்னோடு பள்ளியில் படிக்கும் தன் மகனையும் அழைத்துச் செல்கிறான். இந்த பயணத்தின் வழியாக மிக மிக அடித்தட்டு
மக்களின் வாழ்க்கையும், அவர்களுக்குள்ளும் வேரூன்றி கிடக்கும் ஆணாக்க சிந்தனையையும் அழகாக சொல்கிறது படம்.
மதுரை அருகில் உள்ள ஒரு கிராமம்தான் கதை களம். தந்தை மகனின் நீண்ட பயணத்தில் வரும் அந்த வெயில் காயும் வரண்ட பூமி, கருவேலங்காட்டு மரங்கள், காலை பதம்பார்க்கும் கல்பாதைகள், இப்படி ஒரு நிலபரப்பு தமிழ்நாட்டில் இருக்கிறதா என ஆச்சர்யப்பட வைக்கிறது விக்னேஷ் குமுலை மற்றும் ஜெயபாரதியின் ஒளிப்பதிவு.
எலியை பிடித்து சமைத்து உண்டும் இருளர்கள், கொடும் வெயிலில் அலைந்து தன் குழந்தைக்கு கருவேல மர நிழலில் அமர்ந்து தாய்பாலூட்டும் இளம் தாய், ஊற்றில் வரும் சிறிதளவு நீரை சேரித்து செல்ல மணிக் கணக்கில் காத்திருக்கும் பெண்கள் என படம் பல விஷயங்களை மவுனமாக பேசிவிட்டு செல்கிறது.
கட்சி கொடி கம்பங்கள், ஜாதி வெறியாட்டங்கள், பச்சை பசேலென வயல்வெளிகள், கரையை தொட்ட சொல்லும் நீரோடைகள், குமரிகளின் ஆட்டங்கள், கோவில் திருவிழாக்கள் என கிராமத்தை காட்டிய சினிமாக்களுக்கு மத்தியில் இது எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கையை காட்டுகிறது இந்த கூழாங்கல்,
குடிகார தந்தையாக நடித்துள்ள கருத்தப்பாண்டியனும், மகனாக நடித்துள்ள செல்லப்பாண்டியும் எந்த ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை. கணபதியாகவும், வேலுவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால்கூட அது வழக்கமான வார்த்தைதான். சோனி லிவ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமாவுக்கு ஆதரவு தாங்க.