தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. இந்த படத்தின் கதை என்னவென்றால் 1990களில் அரசாங்கம் கல்வியை தனியார்மயமாக்க அனுமதித்தவுடன் பல தனியார் நிறுவனங்கள் கல்வியை வியாபாரமாக துடிக்கிறது. அதை ஒரு இளம் ஆசிரியர் எப்படி தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார் அந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பெரிய புரட்சிகரமான சமூக நீதியை காக்கும் படம் என நினைத்து விடாதீர்கள். படத்தி ஒன்லைன் என்னவோ சூப்பராத்தான் இருக்கிறது. ஆனால் அதை சொல்லி இருக்கும் விதம் சராசரி தெலுங்கு படத்தின் கமர்சியல் மசாலா.
பிளஸ் டூ மாணவன் போல் இருக்கும் தனுஷுக்கு வாத்தி வேடம் சுத்தமாக பொருந்தவில்லை. நாயகி சம்யுக்த்தா அழகாக இருக்கிறார். இருந்தும் என்ன பயன் அவருக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. மற்றபடி வாத்தி தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி சண்டை போடுகிறார். சென்டிமெண்டில் உருக வைக்கிறார். சமுத்திரகனி வில்லனாம். கோட்டும் சூட்டும் போட்டு கூலிங் கிளாஸ் போட்டால் வில்லன் என்பதை சமுத்திரக்கனி நினைத்து விட்டார்.
இந்த படம் பாக்குற காசில் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை ஒரு பழக்கூடையோடு சென்று பார்த்துவிட்டு வந்தால் அவரும் மகிழ்வார். நமக்கும் மகிழ்வாக இருக்கும்.