அதே ஆணியை புடுங்கும் பகாசூரன்

பெற்ற மகளை வாழ்க்கையை நான்கு பேர் நாசம் செய்தால் ஒரு தந்தை என்ன செய்வானோ அதே ஆணியைத்தான் பகாசூரனும் புடுங்கி இருக்கார்.

அவரது மகள் மேல்படிப்புக்காக கல்லூரிக்கு சென்ற இடத்தில் சக மாணவன் ஒருவனை காதலிக்கிறார் அவளின் பிறந்த நாளின் போது அவளை சந்திக்கும் காதலன் அவளிடம் ஒரு முத்தம் கேட்கிறார். அவளும் முத்தம் கொடுக்கிறார் அதை விடுதி வாட்ச்மேன் செல்போனில் படம் எடுத்து மிரட்டி அவளின் சங்கிலி பறித்துக் கொள்கிறார்.

அடுத்து அந்த வீடியோ விடுதி வார்டனுக்கு போகிறது அவர் அவளை கல்லூரி பேராசிரியர் ஒருவரோடு உடலை பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார் அதன் பிறகு கல்லூரி தாளாளர் படுக்க சொல்லுகிறார் இப்படியாக ஆளாளுக்கு அந்த பெண்ணை படாத பாடுபடுத்த கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

அதன் பிறகு தந்தை பழிவாங்க ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு இடத்திற்காக சென்று ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளுகிறார். இதை முன்னாள் ராணுவ அதிகாரி நட்டி விசாரிக்கிறார் அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் கதை.

வழக்கமான பழிவாங்கல் கதையை பகாசூரன், மகாபாரத கதை, தெருக்கூத்து, சாமியார் தோற்றம் என விதவிதமாக கலர் பூசி காட்டுகிறார் இயக்குனர் மோகன் ஜி.

செல்வ ராகவன் தெருக்கூத்து கலைஞராக எவ்வளவு மோசமாக நடிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக நடித்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞனுக்கு உரிய அந்த கம்பீரம் நளினம் இது எதுவுமே அவரிடம் இல்லை.

படம் முழுக்க கால் தடுக்க நடந்து கொண்டே இருக்கிறார். ஆனால் எதையும் செய்ததாக தெரியவில்லை.

கடந்த இரண்டு படங்களில் ஜாதி பிரச்சனைகளை சொல்லி அதன் மூலம் பரபரப்பு கிளப்பி வசூல் பார்த்த மோகன் ஜி இந்த படத்தில் தன் சரக்கு இவ்வளவு தான் என்பதை அழுத்தமாக காட்டியிருக்கிறார். மற்றபடி ஏற்கனவே கொடுக்கப்பட்ட பில்டப்புகள் மாதிரி படத்தில் எதுவுமே இல்லை

Leave A Reply

Your email address will not be published.