மலையாள நடிகையான அபர்னாதாஸ் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ‘டாடா’ இந்த படத்தில் அவர் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா விஜயமாலில் நடந்தது.
இந்ந விழாவில் கலந்து கொண்டு பேசிய அபர்னாதாஸ் “தமிழில் நான் முதல் முதன்முதலாக நாயகியாக நடிக்கும் படம் இது. இந்த படத்தில் நான் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறேன். அப்படி நடிக்க எனக்கு பயமாக இல்லை. ஒரு வேளை நான் அடிக்காமல் இருந்திருந்தால் அந்த கேரக்டரில் இன்னொரு நடிகை நடித்திருப்பார். அதனால் எனக்கு தயக்கம் இல்லை” என்றார்.
திடீரென மேடை பேச்சை நிறுத்திய அவர் இந்த கூட்டத்தில் மலையாளிகள் இருக்கிறீர்களா? என்று கேட்டார் அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். அவர்களுடன் சிறிது நேரம் மலையாளத்தில் பேசினார். தமிழ் படத்தின் விழா தமிழ்நாட்டில் நடக்கும் போது மலையாள ரசிகர்களை அழைத்து பேசியது சலசலப்பு ஏற்படுத்தியது.