விஜய்சேதுபதி நடிக்கும் வெப்தொடர்

விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் வெப் தொடர் ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு*

அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான ‘ஃபார்ஸி’. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார்.

‘ஃபார்ஸி’ தொடரில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோருடன் ராசி கண்ணா, ரெஜினா கஸண்ட்ரா, கே.கே. மேனன், அமோல் பலேகர், ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா, குப்ரா சையத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த வலைதள தொடருக்கு இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே உடன் இணைந்து சுமன் குமார் மற்றும் சீதா ஆர். மேனன் ஆகியோர் இணைந்து கதை, வசனம் எழுதி இருக்கிறார்கள். இந்த வலைதள தொடரை டி2 ஆர் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர்களான ராஜ் மற்றும் டி கே தயாரித்திருக்கிறார்கள்.

போஸ்ட்டரை வெளியிட்டு விஜய்சேதுபதி பேசியதாவது: நான் முதன்முதலாக இந்தியில் பேசி நடித்திருக்கும் வலைதள தொடர் ‘ஃபார்ஸி’. பிப்ரவரி பத்தாம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. என்னுடன் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் நடித்திருக்கிறார். இதனை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.

Leave A Reply

Your email address will not be published.