ஜேம்ஸ் பாண்ட் படங்களை காப்பி அடித்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை விட விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும் இருக்கிறது. ஷாருக்கானும், ஜான் ஆபிரகாமும் இந்திய உளவாளிகள். தன் மனைவி சாவுக்கு இந்தியா காரணம் என்பதால் நாட்டை அழிக்க பாகிஸ்தானுடன் இணைந்து வேலை செய்கிறார் ஜான் ஆபிரகாம், அதனை ஷாருக்கான் எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதை.
இருவரும் சகட்டு மேனிக்கு சண்டை போடுகிறார்கள், நாயகி தீபிகா படுகோன் காலை விரித்து காட்டுகிறார். காலை விரித்து சண்டை போடுகிறார். இடையில் சல்மான்கானும் வந்து ஷாருக்கான் பாய்க்காக சண்டை போடுகிறார். ஸ்பெயின், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் என பறந்து பறந்து படம் எடுத்து பிரமாண்டம் காட்டியிருக்கிறார்கள். வழக்கம்போல அதர்மம் அழிந்து தர்மம் ஜெயிக்கிறது. 200 ரூபாய் கொடுத்து படம் பார்த்தாலும் எண்டர்டெயின்மென்ட் கன்பார்ம். ஆனால் லாஜிக் பற்றியெல்லாம் பேசக்கூடாது