ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் வெப் தொடர் இது. வெப் தொடர் என்றாலே ஆபாச காட்சிகள், வசனங்கள், சஸ்பென்ஸ் திரில்லர் கிரைம் திரில்லர் என்று போய்க்கொண்டிருக்கும் இந்த காலத்தில் 1990களில் நடந்ததாக அல்லது நடப்பதாக கூறப்படும் ஒரு கதை.
வீரப்பண்ணைபுரம் என்ற கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் வினோதமான சில பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானது ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் அவள் படிக்கக் கூடாது உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். இதனால் அந்த ஊரில் எந்த பெண்ணும் பத்தாவது வகுப்பை தாண்டவில்லை. 20 வயதுக்குள் இரண்டு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொண்டு கஷ்டமாக வாழ்கிறார்கள் அல்லது செத்துப் போகிறார்கள்.
அந்த ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற மாணவி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள் இதனால் தான் வயசுக்கு வந்ததையே மறைத்துக் கொண்டு தொடர்ந்து படிக்கிறாள். அவள் மறைத்த விஷயம் வெளியில் தெரியும் போது என்ன நடக்கிறது தமிழ்ச்செல்வி தான் நினைத்ததை சாதித்தாளா என்பது தான் படத்தின் கதை.
இப்படிப்பட்ட கிராமம் இப்போது இல்லையே என்று யாரும் கூறி விடக்கூடாது என்பதால் தான் கதை 1990 இல் நடப்பதாக இயக்குனர் முத்துகுமார் சொல்லி இருக்கிறார் படத்தில் நடித்திருக்கும் அனைவருமே யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் தெளிவாக நடித்திருக்கும் அபி செல்வியின் நட்சத்திராவின் நடிப்பை கூறலாம்.
எட்டு எபிசோட் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கு எபிசோடுகள் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும் அதன் பிறகு போக போக விறுவிறுப்படையும். கதையை பெரிதாக கொண்டாட முடியாவிட்டாலும் ஒரு கிராமத்து வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் கிடைக்கும். நேரம் இருந்தால் ஒரு முறை பாருங்கள்