ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “காந்தாரி” படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் ஹன்சிகா நடிக்கிறார்.
கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இதில் ஒரு கேரக்டரில் ஹன்சிகா பேயாக நடிக்கிறார்.
ஹன்சிகாவுடன் மற்றும் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடிகளம்’ நரேன், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு முடிவடைதுள்ளது.
ஜெயம்கொண்டான், கண்டேன்காதலை, சேட்டை, இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்த இயக்குநர் கண்ணன்.
தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் காசேதான்கடவுளடா படத்தை
டைரக்ட் செய்துள்ளார்.