நந்தா, ராணா தயாரிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான தபடம் லக்தி. இப்படத்தில் சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த், வினோத்சாகர், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எனிமி, ஆக்ஷன, வீரமே வாகை சூடும் தோல்விப்படங்களால் துவண்டு போன விஷால், அடுத்து வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய காட்டாயத்தில் இருந்ததால், லக்தி படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த படத்தின் சண்டைகாட்சியில் பல முறை விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஷால் கான்ஸ்டபிள் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல்நாளில் தமிழகத்தில் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.23கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 3.40 கோடியை மட்டுமே வசூலித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணா மற்றும் நந்தா ஆகியோர் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள் என்று கூறப்பட்டாலும் விஷாலின் பணம் தான் இந்த படத்திற்கு பணத்தை போட்டுள்ளதால், அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.