நாலு சண்டை, நாலு பாட்டு, ரெண்டு செண்டிமென்ட் இருந்தா போதும் நம்ம முகத்துக்கு படம் ஓடினும்னு நம்புற ஹீரோக்களில் ஒருத்தர் விஷால். அதையே பெருசா நம்பி வந்திருக்கிறார்.
கான்ஸ்டபிளான விஷால் எதிர்பாராத விதமாக சென்னையிலேயே பெரிய தாதாவோடு மோத வேண்டியவராகிறார். தாதா ஆயுதம் ஆள் அம்பாரியோடு வர வெறும் லத்தியை வைத்து விஷால் எப்படி அம்புட்டு பயலுவளையும் அடிச்சு துவம்சம் பண்றாரு அப்படீங்கறதுதான் கதை.
இதுக்கு இடையில மனைவி, மகன் செண்டிமென்ட்ட சேர்த்து விட்டுருக்காங்க. இடைவேளைக்கு பிறகு படம் முழுக்க சண்டைக்காடா கெடக்கு. பாவம் விஷாலு ரத்தம் சொட்ட சொட்ட நடிச்சிருக்காரு. ஆனால் கதை வேணாமாய்யா…
படம் பார்த்துட்டு வெளியில வரும்போது சந்திரபாபு பாட்டுதான் மனசுல ஓடுது “லத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை…”