விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதை முன்னிட்டு இசை வெளியீட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய்யின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த சில ஆண்டுகளாக அம்மா, அப்பாவை சந்திக்காமல் இருக்கும் விஜய், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர்களைப் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சியில் அவர்கள் இருவரின் பங்களிப்பு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சில மாதங்களாக விஜய் அவரது அம்மா, அப்பா இருவரையும் சந்திக்காமல் இருந்து வருகிறார்.
வாரிசு விழாவில் எஸ்ஏசியும் ஷோபாவும் பங்கேற்றபோதும், விஜய் அவர்களிடம் சரியாக பேசிக்கொள்ளவில்லை. விஜய் மேடையில் பேசும் போதும் அம்மா, அப்பா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல், அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஜஸ்ட் ஹேண்ட் ஷேக் மட்டும் செய்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார் விஜய். இந்தக் காட்சிகள் விஜய் ரசிகர்கள் உட்பட அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
Next Post