அருவி படத்துல நடிச்சு திடீர்னு புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் அதிதி பாலன். அந்த படம் பெரிய ஹிட்டாச்சு. சரி நிறைய படங்கள்ல நடிப்பார்னு பார்த்தா நான் வக்கீலுக்கு படிச்சவா அந்த வேலைக்கு போறேன்னு போயிட்டார். அப்புறம் திடீர்ல மலையாள படத்துல நடிச்சாரு, தமிழ்ல குட்டி ஸ்டோரின்னு ஒரு அந்தாலஜி படத்துல ஒரு சின்ன கதையில நடிச்சாரு.
தேடி வந்த சான்சையெல்லாம் வேண்டாமுன்னு சொல்லிட்டு குட்டி ஸ்டோரியில நடிக்கிறியே என்னம்மா உன் கணக்கு கேக்குறதுக்கு ஆளில்லை.
இப்போ திடீர்னு கருமேகங்கள் கலைகின்றன என்கிற தங்கர் பச்சான் படத்துல நடிக்காரு. படத்தோட ஷூட்டிங் முடியுற ஸ்டேஜில இருக்கும்போது இப்போ வந்த சேர்ந்திருக்காரு. இந்த படத்துல சாய் பல்லவியை நடிக்க வைக்கலாமுன்னு காத்துக்கிட்டிருந்தாரு தங்கரு. அந்தம்மா டிமிக்கி கொடுத்துவிட மாட்டிக்கிட்டாரு அதிதி. அடுத்து என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.