விஷால் இப்போ லத்தி அப்படீன்னு ஒரும் படம் நடிச்சிருக்காரு. அதனை அவரு கூடவே சுத்திக்கிட்டு திரியுற மார்க்கெட் இழந்த நடிகர்களான நந்தாவும், ரமணாவும் தயாரிச்சிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட்டுல தயாராகி இருக்காம்.
இந்த படத்துல விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிச்சிருக்காரு. போலீஸ் கான்ஸ்டபிளுக்கு நல்ல வாழ்க்கை இல்லையாம், லீவு இல்லையாம், சங்கம் இல்லையாம், அவுங்க நாட்டுக்காக வாழ்க்கைய¬ ஒப்படைச்சிட்டு வாழ்றாங்களாம். அவுங்களுக்கு படத்தை காட்டப்போறாராம்.
இந்த அளவிற்கு விஷால் போலீசுக்கு ஜால்ரா தட்டுறதுக்கு காரணம் ஏதாவது இருக்குமோன்னு நெட்டிசன்கள் சந்தேகப்படுறதுல நியாயம் இருக்குல. அரசு மற்றும் அதிகாரிகளின் ஏவலாளிகள்தான் கான்ஸ்டபிள்கள். அந்த வேலையை ஒப்புக்கொண்டுதானே அவர்கள் வந்திருக்கிறார்கள். பிறகு எதற்கு இவ்வளவு ஜால்ரா போடுறார் என்று கேள்வி கேக்குறதுலேயும் நியாயம் இருக்குல்ல யுவர் ஆனர்.