நடிகர் திலகம் சிவாஜி பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்திச்சு. இந்த விழாவுல பேசின இளையராஜா, சிவாஜியை பற்றி ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்கிற ரீதியில் பேசிவிட்டு கடைசியாக ஒன்றைச் சொன்னார்…
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிவாஜிக்கு பாராட்டு விழா ஒன்று நடத்த முடிவு செஞ்சி அதுக்காக பணம் வசூல் பண்ணினார். என்கிட்ட வந்து கமல் இவ்ளோ கொடுத்திருக்கார், ரஜினி இவ்ளோ கொடுத்திருக்கறார் நீங்க எவ்ளோ தர்றீங்கன்னு கேட்டார். நான் அந்த பரிசு பொருளுக்கு மொத்தம் எவ்வளவு செலவாகுதுன்னு கேட்டு மொத்த பணத்தையும் நானே கொடுத்தேன். இந்த விஷயத்தை இதுவரைக்கும் நான் யாருகிட்டேயும் சொல்லல. இப்போ தம்பட்டம் அடிக்கிறதுக்காவும் சொல்லல. சிவாஜிக்கு திரையுலகமும் இதுவரை வந்த அரசுகளும் எதுவுமே செய்யல இந்த இளையராஜாதான் செய்தான். என்றார்.
சிவாஜிக்கு உரிய மரியாதையை மத்திய மாநில அரசுகள் தர்லேங்றது ஓரளவு’கு உண்மைதான். கருணாநிதி சிவாஜிக்கு பீச்சுல சிலை வைத்தார். மணி மண்டபம் கட்டினார் இதெல்லாம் இளையராஜாவுக்கு தெரியாதா?. சிவாஜி சிலையை ஜெயலலிதா அகற்றினாரே அப்போ எங்கே போயிருந்தார் இளையராஜா. ஏதோ நினைவு பரிசு வாங்க பணம் கொடுத்துப்புட்டு நான் மட்டும்தான் சிவாஜிக்கு செஞ்சேன்ங்கறது எவ்வளவு பெரிய வாய்க்கொழுப்பு.
Next Post