மீண்டும் வெளியாகும் சிரித்து வாழவேண்டும்

எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். தற்போது இந்த படம் நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி 17ம் தேதியன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

எம்.ஜி.ஆர்.-லதா ஜோடியுடன் எம்.என்.நம்பியார்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,ஐசரிவேலன்,எஸ்.வி.ராமதாஸ்,வி.எஸ்.ராகவன்,எல்.காஞ்சனா,ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை வாலியும்,புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.