அரசியல் செய்கிறார்கள்: பத்திரிகையாளர்களை நடிக்க வைக்க மாட்டேன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அமீர் பேசியதாவது: தமிழ் திரையுலகில், ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் சினிமாவில் இருப்பதே ஒரு சாதனை தான்.

நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த ‘உயிர் தமிழுக்கு’ என்கிற டைட்டில் இதற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன். இந்த சமயத்தில் இது சரியான ஒரு டைட்டில்.

இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும்.

யோகி படத்தில் அறிமுகமானேன். அப்போது தேவராஜ் (தினகரன் நிருபர்) என்ற பத்திரிகையாளர்களை நடிக்க வைத்தேன். பத்திரிகையாளர் நடித்தால் படத்திற்க பத்திரிகையாளர்கள் சப்போர்ட் செய்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுக்குள் அரசியல் இருப்பது எனக்கு தெரியவில்லை. தேவராஜ் நடித்தாலேயே படத்தை கழுவி ஊற்றினார்கள். அன்றுமுதல் இனி பத்திரிகையாளர்களை நடிக்க வைப்பதில்லை. என்று முடிவு செய்து விட்டேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.