சன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் கிலிம்ஸ் வெளியாகியுள்ளது.
இதில் ரஜினியின் கேரக்டர் பெயர் முத்துவேல் பாண்டியன் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முத்துவேல் என்பது கருணாநிதியின் தந்தை பெயர். முத்துவேலர் என்று அவரை கவுரமாக குறிப்பிடுவார்கள். அந்த பெயரை ரஜினி கேரக்டருக்கு வைத்துள்ளனர்.