சில படங்களுக்கு விமர்சனம் செய்து அதற்கு ஒரு விளம்பரம் தரக்கூடாது அந்த வகை படம் இது. என்ன செய்வது பார்த்து தொலைத்தாகிவிட்டது.
நீங்களும் காசு கொடுத்து ஏமாந்திடக்கூடாது. அக்கா தங்கையுடன் படத்துக்கு போய்விடக்கூடாது என்பதற்காக இந்த விமர்சனம். ஒரு மலையாள பெண்ணை வற்புறுத்தி காதலிக்க வைக்கம் தமிழ் இளைஞனின் கதை.
சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்கி இருக்கிறானர். பாவம் பெரிய இடத்து பிள்ளை ஜீவா விபரம் தெரியாமல் நடித்திருக்கிறார். அதிலும் பொம்பள வேஷமெல்லாம் போட்டிருக்கிறார்.
விடிவி கணேஷ் வயாக்ரா மாத்திரையை போட்டுக் கொண்டு எப்போதும் புடுக்கை கையில் பிடித்துக் கொண்டே திரிகிறார்.
படத்தில் நாயகனின் தங்கையை சிலர் காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்கின்றனர். அதை தட்டிக்கேட்டு சண்டையிடும் நாயகன், இதையேத்தான் நாயகியிடமும் செய்கிறார். நாயகியை துரத்தி துரத்தி ஸ்டாக்கிங் செய்து காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். தங்கைக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?. தட்டிக் கேட்க வரும் தந்தையையும் மிரட்டுகிறார்.
அதேபோல படத்தின் ஆரம்பத்தில் தன் தங்கையிடம் ‘பசங்கள ஏமாத்தாம ஒருத்தன லவ் பண்ணு’ என கூறும் நாயகன், இரு நாயகிகள் ஒருவரை காதலித்து மற்றவரை காதலிப்பதாக நடித்து ஏமாற்றுகிறார்.
‘கொழந்தியா குரங்கு மாதிரி இருந்தாலும் நம்ம பசங்க விடமாட்டாங்க’ என்பது மாதிரியான அறுவெறுப்பான வசனங்கள் நிறைந்து கிடக்கிறது.
படத்தை டிவியில போட்டாக்கூட பார்த்துடாதீங்க.