குடும்ப தொழிலான அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர்.
ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து தனியொரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை.
படத்தை சில கோடிகள் செலவில் எடுத்துவிட்டு அதை பலகோடி செலவில் விளம்பரப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள். சொந்த காசில் சுயவிளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுசரி பெங்களூரு தொழில் அதிபரின் கதை எங்களுக்கு எதுக்கு என்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். நிறைய பணம் இருந்தால் ஏழை கர்நாடக மக்களுக்காக நாலு இலவச பள்ளிக்கூடம் கட்டங்கப்பு.