தமிழ் சினிமாவில் பெரிய படங்களின் புரமோசன்களுக்கு பெரிய நடிகர் நடிகைகள் வந்து விடுவார்கள். இதனால் அந்த நிகழ்ச்சிக்கு செய்தி மதிப்பு கூடிவிடும். ஆனால் சிறு முதலீட்டில் தயாராகும் படங்களுக்கு பெரிய நடிகர் நடிகைகள் வராததால் சிலரை வலிந்தும், பணம் கொடுத்தும் வரவழைக்க வேண்டியது இருக்கிறது.
தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு, கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் இதில் முக்கியமானவர்கள்.
இவர்கள் மேடையில் ஏதோ சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்காக வந்தவர்கள் போன்று பேசுவார்கள் ஆனால் நிஜத்தில் இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். தயாரிப்பாளர் கே.ராஜன் மட்டும் ஒரு மேடைக்கு தான் வாங்கும் 5 ஆயிரம் ரூபாயை அந்த மேடையிலேயே ஏழைகளுக்கு வழங்கி விடுகிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
கே.பாக்யராஜ் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. இப்போது இந்த பேச்சு வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.