விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படம் சமீபத்தில் வெளிவந்தது. தாதாவை பழிவாங்கும் போலீஸ் என்ற பழைய கதையை பழைய காட்சிகளுடன் படமாக்கி இருந்தாரு பொன்ராம். போலீஸ் கேரக்டருக்கான பிட்டே இல்லாமல் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. வெறும் சண்டை காட்சிகளை நம்பியே படத்தை எடுத்திருந்தார்கள்.
நெட்டிசன்கள் படத்தை கி்ழித்து தொங்க விடுகிறார்கள். தியேட்டர்கள் காத்து வாங்குகிறது. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் அலுவலகத்தில் கேக் வெட்டி ஆளுயர மாலை அணிந்து வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள். யாரை ஏமாற்ற இந்த வேலை விஜய் சேதுபதிக்கு புத்திமாறிப்போச்சா என்று நெட்டின்கள் விளாசி வருகிறார்கள்.